Search
Search

அவ்ளோதான்..பத்து வருஷத்துல ரஜினியை மறந்துடுவாங்க : நடிகரின் பேச்சால் சர்ச்சை..!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக ரஜினிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அவருடைய சில படங்கள் தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் காலம் போக போக அப்படங்களை ரசிகர்கள் மறந்திடுவார்கள். ஆனால் கமலின் அன்பே சிவம், குணா போன்ற படங்கள் என்றென்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் என்றார்.

அவருடைய இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like