என்னது ஸ்பூன் விறல் டாஸ்கா.. கலகலப்பில் மூழ்கிய குக் வித் கோமாளி அரங்கம்!

உண்மையில் பெருந்தொற்று காலத்தில் வீட்டில் தனியே முடங்கிய பலருக்கு நிம்மதி அளித்த ஒரு சில விஷயங்களில் முக்கியமான ஒன்றுதான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நெகிழ்ச்சிக்கு TRPம் அதிகம் ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.
வேலை சொல்லியே கொல்லும் பட் அவர்களின் கண்டிப்பும் ஐயா தாமோதரன் அவர்களின் அன்பும் இந்த நிகழ்ச்சியை இன்னும் மெருகேற்றி உள்ளது என்றே கூறலாம். இந்த சீசனை பொறுத்தவரை பாலா இல்லாதது ஒரு குறையாகத்தான் பார்க்கப்படுகிறது.
ஆனால் அலம்பலுக்கு குறையில்லாமல் வழக்கம்போல பார்த்துக்கொள்கிறார் புகழ். இந்நிலையில் இன்று இரவு மற்றும் நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கையில் ஃபலூடா ஸ்பூன்களை கட்டிக்கொண்டு சமையல் செய்ய வேண்டுமாம்.
இந்த முறை இந்த நிகழ்ச்சிக்கு 1947 பட நாயகன் கெளதம் கார்த்திக் வந்துள்ளார், இந்த படத்தில் புகழ் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த டாஸ்க் கொடுத்தது பட் என்பதால் அனைவரும் ஒரு கட்டத்தில் கடுப்பாகி we hate bhat சார் என்று கோஷமிட்ட துவங்கியுள்ளனர்.