தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா

கொரோனா தொற்று எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்து வருகிறது. இருப்பினும், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், பெரும்பாலான மக்கள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக சுற்றி வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் படிக்கும் 66 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட்டுள்ளது.