பிறந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயர் வைத்த பெற்றோர்

கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டு உலகையே அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயர் வைத்துள்ளனர்.

ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் அவர் பெயரிட்டுள்ளனர்.உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவர்கள் தற்போது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வசித்து வருகிறார்கள்.

பல பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா…எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கா பாருங்க…