சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில் தான் அதிகம் உள்ளனர். சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தப்பிச் செல்லும் காட்சிகள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் 50 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள கழிவறையின் கதவு ஒன்று நீண்ட நேரமாக மூடி இருந்ததால் கதவை உடைத்து பார்த்தபோது அந்த 50 வயது நபர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் அந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.