ஐஸ் க்ரீம் நிறைய சாப்பிடாதீங்க.. கொரோனா வந்துடும்..

கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கும் என்று சமீபகாலமாக மருத்துவர்கள் கூறி வந்தனர். அதனால், பலரும் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று தேடி அழைந்தனர். இந்நிலையில், எந்தெந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதிக்கும் என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதிக்கும் உணவுகள்

ஐஸ் க்ரீமில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் சர்க்கரை, நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக பாதிக்கக்கூடிய ஒன்று. எனவே, அதனை கொரோனா பரவும் சூழ்நிலையில் தவிர்ப்பது சிறந்தது. மேலும், குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த பொருளை சாப்பிடக் கொடுக்கக்கூடாது.

அடுத்த உணவுப் பொருளும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது தான். அதாவது, சாக்லேட்டை அதிகம் சாப்பிடக்கூடாது. இதுவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகம் பாதிக்கும். ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

மது அருந்துவதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக பாதிக்கக்கூடிய ஒன்று. எனவே, கொரோனா பரவும் இந்த நேரத்தில் மதுவை தவிர்ப்பது சிறந்தது. நான் வெறும் பீர் மற்றும் ஒயின் தான் சாப்பிட்டேன் என்று சொல்வது தவறு தான். அதில் உள்ள சிறிய அளவிலான ஆல்கஹாலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும்.

உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும் எனர்ஜி பானங்களும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறானவை. அதில் இருக்கும் காபின் தூக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இரவில் சரியாக தூங்காவிட்டால் அதுவே நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை மோசமாக்கி விடும்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், உருளைக்கிழங்கில் தயாராகும் சிப்ஸ்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கலாம். ஆனால் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரானவை. அவற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உடல் எடை மற்றும் உயரம் ஆகியவை சரியான அளவில் இல்லாவிட்டாலும், அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பெருமளவில் பாதிக்கும். எனவே, உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை வைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்திடுங்கள்.

Recent Post