ஒட்டாவா : கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 906 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், கனடாவில் நோய் பரவுதலை கட்டுப்படுத்தவும், மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 906 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 89,418 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 102 பேர் பலியானதால், மொத்தமாக பலி எண்ணிக்கை 6979 ஆக உள்ளது.

கனடாவில் அதிகபட்சமாக கியூபெக்கில் 530 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது, மொத்தமாக 50,232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,363 பேர் பலியாகினர். 15,908 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கியூபெக்கை தொடர்ந்து, ஒன்ராறியோவில் ஒருநாளில் 344 பேர் பாதிக்கப்பட்டு, மொத்தமாக 27,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நோவா ஸ்காட்டியோ போன்ற பல்வேறு நகரங்களிலும் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. கனடாவில் மொத்தமாக 47,518 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.