நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – தமிழகத்தில் தற்போதைய நிலை என்ன?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இது, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வருபவர்களால் அதிகமாக பதிவாகிறது என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேற்று (22/05/2020) ஒரே நாளில் மட்டும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 569 பேர். மொத்தமாக சென்னையில் மட்டும் 9,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

846 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 7,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் 7,524 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.