கொரோனாவை வாழ விடுங்க. அதுவும் ஒரு உயிர்தான் – பா.ஜ.க முன்னாள் முதல்வர்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா எப்போது ஒழியும்? மீண்டும் இயல்பு வாழ்கை எப்போது திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது கொரோனாவும் நம்மை போன்ற ஒரு உயிர்தான். அதனை வாழ விட வேண்டும் நம்மை போலவே அதற்கும் வாழ்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் நாம் மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டு, அதை அழிக்க முயற்சிக்கிறோம். ஆனால் வைரஸ் புத்திசாலித்தனமாக தொடர்ந்து தன்னை உருமாற்றிக் கொள்கிறது என்று கூறினார்.

Advertisement

இவருடைய இந்த கருத்தை பார்த்த பலர் இது முட்டாள்தனமான கருத்து என கடுமையாக விளாசி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்து வந்த இவர் அந்த மாநில பா.ஜ.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அண்மையில் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.