உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு : குணமடைந்தோர் எண்ணிக்கை 26.39 கோடியாக உயர்வு

2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும் மறுபுறம் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 6 லட்சத்து 38 ஆயிரத்து 992 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 38 ஆயிரத்து 394 பேர் உயிரிழந்துள்ளனர். 5 கோடியே 11 லட்சத்து 26 ஆயிரத்து 876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 26 கோடியே 39 லட்சத்து 73 ஆயிரத்து 722 பேர் குணமடைந்துள்ளனர்.