80 லட்சத்துக்கு விலைபோன எருமை: செல்ஃபி எடுக்க அலைமோதிய கூட்டம்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஷாங்கிலி என்ற மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

அந்த மாட்டின் பெயர் கஜேந்திரா. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள அந்த எருமையுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
கஜேந்திரா என்கிற அந்த எருமை மாடு நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் பால் கொடுப்பதாகவும் நான்கு வேளையும் கரும்பு மற்றும் புல் உணவாக கொடுக்கப்படுவதாக அந்த மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இந்த மாடு வகைகள் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் உதவும் என்பதால் பல லட்சம் கொடுத்து வாங்க விவசாயிகள் போட்டி போட்டுள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.