வருகிறதா அடுத்த புதிய புயல்… சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பலருடைய வாழ்க்கை பாதித்த நிலையில் அம்பன் என பெயரிடப்பட்ட புயல் வந்து மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடந்து, உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. மேற்கு வங்கம் இன்னும் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், சென்னை, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.