போஸ்டரில் உள்ளது போலவே ஒரு பிரம்மாண்ட செட்.. தயாராகும் தனுஷ் 50 படக்குழு!

அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார், விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு உடனே தனுஷ் தனது 50வது திரைப்பட பணியில் இறங்க உள்ளார்.
அந்த படத்தை அவரே இயக்க, பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளது. எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் உள்பட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளார்.
தற்பொழுது வடசென்னை பகுதியில் இந்த படத்திற்கான லொகேஷன் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், சன் பிக்சர்ஸ் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட போஸ்டரில் உள்ள இடத்தை போல ஒரு பெரிய அளவிலான செட் அமைக்க உள்ளதாகவும் பிரபல விகடன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடசென்னை படத்தை போலவே இதுவும் அப்பகுதியில் உள்ள ஒரு தாதாவின் கதையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பு முடிந்தவுடன் வருகிற ஜூலை மாதத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.