in

குழந்தையாக மாறி சாண்டி செய்த சேட்டை..! வைரல் வீடியோ..!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் சாண்டி.

பின்னர், தனது திறமையின் மூலம் நடன இயக்குநராக மாறிய இவர், காலா, கெத்து உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த பிக்-பாஸ் சீசனிலும் கலந்து கொண்ட இவர், பல குட்டிஸ்களின் மனதை கவர்ந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முகேனு, கவினு, தர்ரு போர் அடிக்குதடா என்று குழந்தை போல் மாறி பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.