நீங்கள் குழந்தை பெத்துக்கங்க.. நான் பணம் தாரேன்..! மக்களிடம் கெஞ்சும் அரசாங்கம்..!

கொரோனா பரவலை தடுக்க அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதனால் பல நாடுகள் பொருளாதராத்தில் பின் தாங்கிய நிலைக்கு சென்றது.

இதுமட்டுமில்லாமல் அந்த நாட்டில் உள்ள மக்கள் பல பேர் வேலையிழந்து கடும் கஷ்டத்திற்குள் உள்ளாகினார்கள். வளர்ந்த நாடுகளும் கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்தது.

Singapore to open new lane for business travelers, house them in bubble |  Business Standard News

இந்நிலையில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடான சிங்கப்பூர் தற்போது ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அந்த அறிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலக பணக்கார நாடுகாளில் ஒன்றான சிங்கப்பூர் கொரோனாவல் மிகவும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தது. அந்நாட்டின் மக்கள் மொத்தம் 57 லட்சம் மட்டுமே ஆகும். அங்கு ஊரடங்கால் பலர் வேலையிழந்து வருமானம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

Singapore Doesn't See Second Coronavirus Wave at This Point - Bloomberg

இதனால் 2019 ஆம் ஆண்டை 2020-21-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது திருமணங்கள் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. பலர் திருமணமாகி குழைந்தை பெற்றுகொள்வதையும் தள்ளிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பலர் இரண்டாம் குழந்தை பெற்று கொள்வதில் விருப்பமில்லாமல் இருந்தனர். இதனால் சிங்கப்பூரில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 1.1 ஆக சரிந்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு 38,705 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. கொரோனா காலகட்டத்தில் இதனை ஆய்வு செய்த அந்நாட்டு அரசாங்கம் கவலையுற்று, ஒரு திட்டத்தை அமல்படுத்தியது.

Singapore's economic measures could save 155,000 jobs, pave way for  future—official | Inquirer Business

பெருந்தோற்று காலகட்டதில் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்கு அரசு தரப்பில் 5,31,000 ரூபாய் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. சிங்கப்பூரில் மக்கள் தொகை குறைந்தால் பொருளாதரம் நிலை மிகவும் கேள்விக்குறியாகிவிடும் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதானல் அரசுக்கான வரி வருவாய் குறைந்து, பல துறைகளின் செலவுகள், வேலைகள் பாதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அங்குள்ள மக்களை குழந்தை பெற்றெடுக்க சொல்லி பல முயற்சிகளையும், திட்டகளையும் அமல்படுத்தி வருகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் கொரோனா தாக்கத்திற்கு பயத்து குழந்தை பெற்றெடுப்பதில் தயக்கத்தை காட்டி வருகின்றனர்.