தேஜாவு திரை விமர்சனம்
அருள்நிதி, மதுபாலா, அச்சுயுத் குமார், ராகவ் விஜய், சேத்தன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி, சுப்ரமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அர்விந்த் ஸ்ரீநிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக இருக்கிறார் மதுபாலா. இவருடைய மகள் ஸ்ருதி வெங்கடை சிலர் கடத்தி விடுகிறார்கள். அதைப் பற்றி விசாரிப்பதற்காக அருள்நிதி அண்டர்கவர் ஆபீஸராக வருகிறார்.
எழுத்தாளர் அச்யுத் குமார் என்பவர் அவர் புதிதாக எழுதி வரும் கதையில் என்ன இருக்கிறதோ அதுதான் தற்போது நடக்கிறது. இதை கண்டு அருள்நிதி மற்றும் மதுபாலா அதிர்ச்சி அடைகிறார்கள். அச்யுத் குமார் எப்படி நடக்கும் உண்மைகளை முன்கூட்டியே ஒரு கதையாக எழுதுகிறார்? கடத்தப்பட்ட ஸ்மிருதி என்ன ஆனார் என்பதே படத்தின் மீதி கதை.
நாயகன் அருள்நிதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அந்த வகையில் இந்த படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். படம் ஆரம்பத்தில் சற்று தடுமாறுகிறது. அருள்நிதி வந்த பிறகு பரபரப்பு கூடுகிறது. அண்டர் கவர் ஆபீஸராக நடித்திருக்கும் அருள்நிதி தனது நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருக்கிறார்.

உயர் அதிகாரியாக வரும் மதுபாலா, மகளைக் காணாமல் தவிப்பது, எதையும் கண்டுபிடிக்க முடியாமல் குழம்புவது என நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
அச்யுத் குமார் நடிப்பும் அவருக்கு மிக சரியாகப் பொருந்தும் எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணிக் குரலும் சிறப்பு. காளிவெங்கட், ஸ்ம்ருதி வெங்கட், ராகவ் விஜய் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் படத்தை சில இடங்களில் சொதப்பி விட்டார் இயக்குநர்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது. முத்தையாவின் ஒளிப்பதிவு கிரைம் த்ரில்லருக்கான விஷுவல்களை கொடுத்து திரையில் மிரட்டுகிறது.
அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான டி பிளாக் படத்திற்கு இந்த படம் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
