2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் இன்று வெளியாகியுள்ளது. அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
டிமான்டி காலனி படம் முடிந்த இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது. முதல் பாகத்தில் ஹீரோ சீனிவாசன் அதாவது அருள்நிதி இறந்துவிடுவது போன்று காட்டுவார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி எப்படி என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.
படத்தில் பேய் வருவதற்கு முன்பே பயம் வந்துவிடுகிறது. ஹீரோவை விட பேய் தான் சக்திவாய்ந்தது என முதல் பாதியில் காட்டியிருப்பார்கள். மேலும் சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை டிமான்டி காலனியின் வெற்றிக்கு உதவியது.
கதாநாயகன் அருள் நிதி வழக்கம்போல் போதுமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற படங்களில் ஒரு சில சீன்களில் வந்த பின் காணாமல் போகும் பிரியா பவானி ஷங்கர், இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கதையின் முக்கிய பாத்திரமாக இருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் கதையும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும்தான். ரசிகர்களுக்கு தான் சொல்ல வந்த கதையை தெளிவாகவும் சஸ்பென்ஸாகவும் சொல்லியுள்ளார்.
படத்தில் இருக்கும் ஒரு சில டுவிஸ்டுகளை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. குறைகள் சில இருந்தாலும் முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் திருப்திக்கும், த்ரிலுக்கும் பஞ்சம் இல்லை.