in

இது எங்களுக்கு தெரியாதா..? ரொம்ப ரொம்ப புதிய அட்வைஸ் சொன்ன தேவயானி..!

கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு படாதபாடு பட்டு வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இறங்கினாலும், பெரும் மாற்றம் எதுவுமில்லை.

இந்நிலையில், நடிகை தேவயானி கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதுகுறித்து பேசிய தேவயானி, அரசின் விழிப்புணர்வு குறும்படத்தில் ஆடுகளம் ஜெயபாலனுடன் நடித்து வருகிறேன்.

கொரோனா நெருங்காமல் இருக்க, முகக்கவசம் அணியுங்கள். அது உயிர்க்கவசம். கபசுர குடிநீர் குடியுங்கள்.

சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும். இதைத்தான் அந்த விழிப்புணர்வு வீடியோவில் கூறியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தேவயானியின் இந்த பேச்சைக்கேட்ட நெட்டிசன்கள், இதைத்தானே அரசாங்கம் சொல்லி வருகிறது. எதோ, புதிய அட்வைஸ் சொல்வதைப்போலவே தேவயானி சொல்றாங்களே என்று கலாயத்திருக்கின்றனர்.