சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக கேரளா ,தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

latest tamil news

அந்த வகையில் கார்த்திகை மாதம் தொடங்கியதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement