Search
Search

இணையும் தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணி – விரைவில் வெளியாகும் படத்தின் பெயர்!

இயக்குனராக வேண்டும் என்று களம் இறங்கி பிறகு சினிமா துறையில் மிகப்பெரிய நடிகராக மாறிய எத்தனையோ பிரபலங்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் நடிகனாக வேண்டும் என்று திரைத்துறையில் நுழைந்து பின் மாபெரும் இயக்குனராக உருவெடுத்தவர் தான் மாரி செல்வராஜ்.

இயக்குநர் ராம் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இயக்கத்தின் மேல் கொண்ட ஆசையால் இயக்குனர் ராம் அவர்களுடன் மூன்று திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

அதன் பிறகு 2018ம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற மாபெரும் காவியத்தை படைத்து பெரும் வெற்றி கண்டார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து கர்ணன் என்ற திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வெற்றி பெற்றார்.

தற்பொழுது மாமன்னன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் அவர்களுடைய Wunderbar தயாரிப்பில் வெளியாக இருக்கும் 15வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

You May Also Like