வைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கலர்கலராக முகக்கவசம் விற்பனை செய்வதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூரத்தை சேர்ந்த ஒருவர் அவருடைய வீட்டில் நடைபெறும் திருமணத்திற்காக நகைகடைக்கு சென்று, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கேட்டுள்ளார். இந்த ஐடியாவை வைத்துதான் இதனை தயாரித்ததாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறியுள்ளார்.

இந்த முகக்கவசம் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய் விலையில் நகைக்கடையில் விற்பனை செய்யப்படுகின்றன.