தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் அடுத்த படம் உறுதி

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

cinema news in tamil

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம். இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடரும். என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு படங்களுமே செம ஹிட் அடித்ததால் அடுத்து வரப்போகும் படமும் சூப்பர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.