“இதுதான் தல அஜித்” : மனதார பாராட்டிய நடிகர் பார்த்திபன் – ஏன்?

தல அஜித், நல்ல நடிகன் என்பதை தாண்டி நல்ல மனிதன் என்ற பெயரை பெற்றவர். அதற்கு இன்று நட்சத்திர இயக்குநர்களாக வலம்வரும் பலரும் சாட்சி. அந்த வகையில் நேற்று அஜித் குமாரின் தந்தை இறந்த நிலையில் அவருடைய இறுதிச் சடங்கில் ஒரு பிரமிப்பான விஷயம் நடந்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் இரா. பார்த்திபன். அவர் வெளியிட்ட பதிவில் “தந்தையின் மறைவின் போது, நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார். மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது” என்று கூறியுள்ளார்.
தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கூட, தான் நடிக்க வந்த காலத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களை மறவாமல் அருகில் சென்று நன்றி சொல்லும் அந்த பக்குவம் உண்மையில் ப்ரம்மிப்பாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.