in

ஆசைய காத்துல தூதுவிட்டு பாட்டுக்கு ஆடிய செல்வராகவன்..! தாருமாறாக வைரல்..!

தமிழகத்தின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று 7-ஜி ரெயின்போ காலனி.

இப்போதும், கதிர் அனிதாவை யாரும் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு, அந்த கதாபாத்திர வடிமைப்பை மிகவும் நேர்த்தியாக செய்திருப்பார்.

இந்த படத்தில், பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு சீன் என்று கூறினால், அது ஆசைய காத்துல தூது விட்டு பாடலுக்கு கதிர் அவரது நண்பர்களோடு ஆடும் காட்சி.

அந்த காட்சியில், எப்படி நடிக்க வேண்டும் என்பது குறித்து பிற நடிகர்களுக்கு செல்வராகவன் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.