எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளுக்கு திமுக அஞ்சாது – ஸ்டாலின் அறிக்கை

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகள், பட்டிலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் “எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கு திமுக அஞ்சாது; என தெரிவித்துள்ளார்.

கொரோனா கால ஊழலையும் – நிர்வாகத் தோல்வியையும் திசைதிருப்ப எடப்பாடி திரு. பழனிசாமி, குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கைது செய்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா என்ற கொடிய வைரசின் தாக்கத்தால் நாடே சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் அரசு அதிகாலை கைது போன்ற கீழ்த்தரமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது வெட்கக்கேடானது; கண்டனத்திற்குரியது! என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.