ஆர். எஸ். பாரதி ஜாமீனில் விடுதலை

பிப்ரவரி மாதம் 15 தேதி அன்பகத்தில் திமுக இளைஞரணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆர். எஸ். பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இதனால், ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர். எஸ். பாரதி மீது புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார்

அவரைக் கைது செய்தனர். இவரது கைதினை எதிர்த்து மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றும் வெளியிட்டார்.

இந்த நிலையில் காலை 7 மணிக்கு கைது செய்யப்பட்ட ஆர். எஸ். பாரதி சுமார் 11 மணி அளவில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.