வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசிமாடம், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இருப்பினும் விளக்கேற்றிய பிறகு சில செயல்களை நாம் தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
விளக்கு ஏற்றிய பிறகு தலை சீவ கூடாது.
காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்றும் போது கொல்லை புறக் கதவை அடைத்துவிட வேண்டும்.
விளக்கு ஏற்றிய பிறகு துணி துவைக்க கூடாது, தலைக்கு குளிக்க கூடாது.
பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து விளக்கேற்றி வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
விளக்கேற்றிய உடனே சாப்பிடவோ தூங்கவோ கூடாது.
விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்றி வழிபாடு செய்தால் மங்களயோகத்தைத் தரும்.