நடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்

நடை பயிற்சி செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. வேகமாக நடப்பது கலோரிகளை எரிக்க உதவுகிறது. நடைப்பயிற்சி செய்யும் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அது என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம்.

சிலருக்கு இதமான பாடலை மெதுவான ஒலியில் கேட்டுக்கொண்டே நடைபயிற்சி செய்வது பிடிக்கும். இது நல்ல பழக்கம் தான். அதற்காக வெளியில் சத்தம் அதிகமாக இருக்கிறது என்று உங்கள் பாடலின் சத்தத்தை அதிகரிக்கக் கூடாது. அப்படி செய்தால் உங்களது மனம் சீக்கிரமே சோர்வாகி விடும். ஹெட்போன் அலர்ஜியை உருவாக்கும்.

நடைப்பயிற்சி செய்யும்போது இயற்கையை ரசித்துக்கொண்டே செல்ல வேண்டும். சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.

Advertisement

கால்களுக்கு மிக இறுக்கமான ஷுக்களை தவிருங்கள். வாக்கிங் செல்வதற்கு என தனியாக ஷு வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் கால்களுக்கு மென்மையான ஷுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நடை பயிற்சி முடித்த உடனே டீ, காபி, வடை, பஜ்ஜி என்று சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் நடைபயிற்சி செய்ததே வீணாகிவிடும்.

சிலருக்கு நடைப்பயிற்சி செய்யும்பொழுது புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் நடைப்பயிற்சி செய்யும்போது உங்களின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்கும். குறிப்பாக உங்கள் நுரையீரல் நன்கு சுத்தமான காற்றை சுவாசித்து இருக்கும். அந்த நேரத்தில் புகையை அனுப்பி அதனை கெடுக்க வேண்டாம்.

பல பேர் மொபைல் பயன்படுத்திக்கொண்டு வாக்கிங் செல்கிறார்கள். இதுவும் தவறான பழக்கம். சோசியல் மீடியாவில் நீங்கள் படிக்கும் சில விஷயங்கள் உங்கள் சிந்தனையை மாற்றி விடும். நடை பயிற்சியில் கவனம் குறைந்து விடும். எனவே அதை தவிர்த்து நடைபயிற்சி செய்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.