இந்த மாதிரி அமர்ந்துக்கொண்டு வீட்டில் வேலை செய்யாதீர்கள்..!

முன்னுரை:-

வீட்டில் இருந்தப்படி வேலை செய்யும்போது, இந்த மாதிரியாக அமர்ந்துக்கொண்டு வேலை செய்யாதீர்கள். அப்படி செய்தால், இந்த மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதுகுறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

விளக்கம்:-

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்திற்கு சென்று பணிபுரிய முடியாமல், வீட்டிலேயே பணிபுரிந்து வருகின்றனர்.இதனால், அவர்களின் உடல் எடை அதிகரித்தல், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மற்றொரு பெரிய பிரச்சனையும் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அதவாது, வீட்டில் பணிபுரியும்போது, கால் மேல் கால் போட்டுக்கொண்டு வேலை செய்யாமல் இருக்கவும்.

இவ்வாறு செய்தவன் மூலம், ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது.

அதாவது நம் கால்களில் உள்ள இரத்தம் புவி ஈர்ப்பு திசைக்கு எதிர் திசை நோக்கி அதாவது மேல் நோக்கி பாய்கிறது. அவ்வாறு செல்லும்போது கால் மேல் கால் போட்டு அமர்வதால் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தடைபடுகிறது. இதனால் இரத்தம் தேங்கி அழுத்தம் உண்டாகிறது.

Work From Home அதிக களைப்பை தருகிறதா..? தீர்வு என்ன..?

கொரேனா வைரஸ் பரவி வரும் காரணத்தால், நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது.

இதனால், பல்வேறு ஊழியர்கள் தங்களது வீடுகளில் இருந்து வேலையை செய்து வருகின்றனர். இவ்வாறு வீட்டிலேயே பணி செய்யும் ஊழியர்கள் அதிக களைப்படைவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கான சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

டிப்ஸ்:-

1. ஓய்வு

2. பணி

3. படுக்கை

ஓய்வு:-

கொரோனா வைரஸ் பலருக்கும் உயிர் பயத்தையும் காட்டிலும், வேலை பறிபோய்விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்திவிட்டது. இதன்காரணமாக, பலரும் அதிக மணி நேரம் வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.

அதிக மணி நேரம் வேலை செய்து ஓய்வெடுக்க மறந்துவிடுகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்தால் தான் பணித்திறன் குறையும். தேவையான அளவி;ற்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

பணி:-

காலை எழுந்ததும் வேலை செய்ய துவங்குவது அழுப்பையும், களைப்பையும் தரும். எனவே, காலை எழுந்து சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு, காலை உணவை சாப்பிட்டதும் வேலையை தொடங்கவும்.

படுக்கை:-

வீட்டில் தானே வேலை செய்கிறோம் என்று படுக்கையில் படுத்துக்கொண்டே வேலை செய்யாதீர்கள். அது பயங்கர அழுப்பை ஏற்படுத்தும்.

Recent Post