இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை இன்று தொடங்கியது.

விமான நிலையங்களில் வரும் பயணிகள் முகக்கவசம் அணிந்தும் கிருமி நாசினியால் கைகளை கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். விமானத்தில் பயணிகள் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர வைக்கப்படுகின்றனர்.

நாடு முழுவதும் 1200 விமானங்களை இயக்க திட்டமிட்டனர். ஆனால் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால் 600 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

Advertisement

நாளை முதல் ஆந்திராவில் விமான சேவை தொடங்கும். அதே போல் 28ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் விமான போக்குவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு குறைந்த அளவு விமானங்கள் இயக்கப்படுகிறது.