வசூல் சாதனை படைக்கும் டான் – 100 கோடியை நெருங்குகிறது.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான். டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் வந்த படங்களில் டான் திரைப்படம் தான் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனையை படைத்து வருகிறது.

Advertisement

டான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.48 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. உலகளவில் தற்போது வரை ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

டாக்டர் படத்தை தொடர்ந்து டான் திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என்பதில் சந்தேகமே இல்லை.