கண்ணாடி டம்பளரில் டீ விற்றால் ஆப்பு..! மாநகராட்சி அதிரடி..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர்கள் பயன்படுத்த வேண்டும், ஊரடங்கு உத்தரவு அமல் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

அதில், கண்ணாடி மற்றும் சில்வர் கிளாஸ்களில் டீ விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம் என்றும், அதையும் மீறி விற்பனை செய்பவர்களின் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.