Search
Search

சர்க்கரை வியாதிக்காரர்கள் செய்யக்கூடாதவை என்ன?

udal edai athikarikka unavugal

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அதில் உணவு சம்பந்தமான சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டியவைகள்

வெண்ணை, நெய், பாலில் இருக்கும் கொழுப்பு, தேங்காய் சோறு, உருளைக்கிழங்கு, கப்பக்கிழங்கு, கொழுப்பு நிறைந்த மாமிசங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

பழங்களில் வாழைப்பழம், மாம்பழத்தில் அதிக சர்க்கரை தன்மை இருக்கிறது.

what foods to avoid with diabetes

கூடுதலாக சில விஷயங்கள்

பாலைக் கொதிக்க வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்த உடன் பாலாடையை நீக்கிவிட்டு அருந்தலாம்.

காபி அல்லது டீ தயாரிக்கவும் ஸ்டீம் பாலினை பயன்படுத்தலாம். இதில் வெறும் 0.5 சதவீத கொழுப்பு இருக்கும். பாக்கெட் பாலில் இந்த குறிப்பு 3% என இருக்கும்.

தேங்காய் சட்னி, தேங்காய் துவையல், தேங்காய் சேர்த்த அவியல் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மிகக் குறைந்த அளவு எப்போதாவது உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.

காய்கறிகளை தாளிக்க மிக குறைந்த அளவே எண்ணெய் பயன்படுத்தலாம். எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது மிக மிக நல்லது.

அரிசி உணவினை மூன்று வேளையும் சாப்பிடுவதை தவிர்த்து, கோதுமைப் புட்டு, ராகி புட்டு, சப்பாத்தி போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி புட்டு, தோசை, இட்லி, ஆப்பம் போன்றவைகளை தவிர்த்து விடுங்கள். இரவில் சப்பாத்தி, கோதுமை கஞ்சி சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

Leave a Reply

You May Also Like