கொரோனாவை விரட்ட மண்ணெண்ணெய் குடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால் தனக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் மற்றவர்களின் வதந்தியை நம்பி போலி மருந்துகளை சாப்பிட்டு சிலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் மண்ணெண்ணெய் குடித்தால் கொரோனா போய்விடும் என்ற வதந்தியை நம்பி மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அதனை குடித்துள்ளார். அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதில் கொடுமை என்னவென்றால் முன்னதாக கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்ற தகவலும் தெரியவந்தது. தவறான தகவலை உண்மை என நினைத்து அதனை செய்த டெய்லர் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.

Advertisement