in

கௌதம் மேனனை விமர்சித்த திரௌபதி இயக்குநர்..! அசிங்கப்படுத்திய ரசிகர்கள்..!

ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் எப்போதும் அனைவராலும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அப்படி இருக்கும் திரைப்படங்களில் ஒன்று, வின்னைத்தாண்டி வருவாயா.

இந்நிலையில் இந்த படத்தின் தொடர்ச்சியாக, கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் சமீபத்தில் வெளியானது.

இந்த குறும்படத்தை பலரும் ரசித்திருந்தாலும், நீ எனக்கு 3-வது குழந்தை என்று த்ரிஷா கூறிய டயாலக்கை வைத்து பயங்கரமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், “நிறைய இளைஞர்கள், உங்களுடைய திரைப்படம், ஸ்டைல், வசன உச்சரிப்பு, திரைப்படம் எடுக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வருகின்றனர்.

அவர்களின் மனதில் விஷத்தை விதைக்காதீர்கள். எங்களுடைய மனச்சோர்வை நீக்குவதற்கு நீங்கள் கண்டிப்பாக தேவை. ஒரு ரசிகனாக, இது எனது கோரிக்கை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த டுவீட்டை பார்த்த நெட்டிசன்கள், நீயெல்லாம் கௌதம் மேனனுக்கு அட்வைஸ் பண்றியே என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர்.