பெங்களூருவில் மது அருந்தி வீடு திரும்பிய கணவனை, மனைவி பூரி கட்டையால் அடித்து கொன்று அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாஸ்கர் (வயது 42) என்பவர் மது அருந்தி வீட்டுக்கு வந்த போது, மனைவி ஸ்ருதி (32) அவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ருதி பூரி கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பாஸ்கர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
ADVERTISEMENT
போலீசில் ஸ்ருதி கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துவிட்டதாக கூறியிருந்தாலும், பிரேத பரிசோதனையில் பாஸ்கரின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் ஸ்ருதி கணவரை அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.