இன்று நியூசிலாந்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. அந்த சமயத்தில் நியூசிலாந்த் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) வெலிங்டனில் உள்ள பாராளுமன்றத்தில் இருந்து காலை செய்தி நிகழ்ச்சி ஒன்றில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, பிரதமர் சற்றும் அசராமல், “நாங்கள் இங்கே ஒரு பூகம்பத்தை சந்திக்கிறோம்”என்று சாதாரானமாக நேரலையில் பதிலளித்தார். மேலும், அந்த இடத்தில் லேசான அதிர்வு ஏற்ப்பட்ட போதும், மேலும் நேர்காணலை தொடர ஒப்புக் கொண்டார். அவர் நேரலையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியா…
5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிஸ்போர்ன் வரை வடக்கே மற்றும் தென் தீவின் அடிப்பகுதியில் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.