அது கடவுளுக்கு தான் தெரியும்.. கொரோனா குறித்து பழனிசாமி பேட்டி..!

கொரோனா பரவலின் காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும், சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறிய அவர், கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.