கொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே கரம்பிடித்த கொரோனா நோயாளி!

கெய்ரோ: எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்துள்ளார்.

எகிப்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ஆயிசா மொசாபா. அவர் பணிபுரியும் மருத்துவமனையில் கொரோனா நோயாளியாக முகமது பாமி என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆயிசா தான் சிகிச்சை அளித்து வந்துள்ளார். சிகிச்சையின் போதே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இரண்டு மாத சிகிச்சைக்குப்பின் பாமி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் முன், ஆயிசாவுக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்தி உள்ளார், ஆயிசாவும் அவரது காதலை ஏற்றுக்கொள்ள, அவர்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement

எகிப்து முழுவதும் வைரஸ் 22 ஆயிரத்து 82 பேருக்கு உள்ளது. 879 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சைக்குப்பின் 5,511 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.