சென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்த 5 பேர் பலி

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கூட்ட  நெரிசலால் படியில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் மின் கம்பத்தில் மோதி  கீழே விழுந்து உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த பயணிகள் ராயப்பேட்டை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூர் செல்லும் ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர் மின் அழுத்த கம்பி அறுந்ததால்  புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

போதுமான அளவு ரயில்கள் இயக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.