Search
Search

‘எனிமி’ திரை விமர்சனம்

விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி தினமான இன்று அண்ணாத்த படத்திற்க்கு போட்டியாக ‘எனிமி’ களம் இறங்கியுள்ளது.

Enemy movie vimarsanam in tamil

விஷால், ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஆர்யாவின் தந்தை பிரகாஷ் ராஜ் காவல் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் பயிற்சி கொடுக்கிறார்.

திடீரென ஒருநாள் பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுகிறார். இதனால் நண்பர்கள் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

விஷால், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இதனிடையே மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதனை விஷால் தடுக்கிறார். அதன் பிறகு கொலை முயற்சியில் ஈடுபட்டது தனது நெருங்கிய நண்பன் ஆர்யா என தெரிய வருகிறது.

ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? பிரகாஷ் ராஜை கொலை செய்தது யார்? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால், ஆர்யா இருவரும் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். விஷால், ஆர்யா இருவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

நாயகியாக வரும் மிர்ணாளினி ரவி மற்றும் மம்தா மோகன்தாஸ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். விஷாலின் தந்தையாக வரும் தம்பி ராமையா மற்றும் ஆர்யாவின் தந்தை பிரகாஷ் ராஜ் இருவரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். கிரைம் திரில்லர் பாணியில் படம் சுவாரஸ்யமாக செல்கிறது.

படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து அளித்துள்ளது.

Leave a Reply

You May Also Like