ஈஸ்வரன் விமர்சனம்

படத்தின் ஒரு வரி கதை : பலி வாங்க துடிக்கும் வில்லனிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதே கதை.

நீண்ட நாட்களுக்கு பின் கிராமத்து கதை களத்தில் சிம்பு நடித்து, சுசீந்திரன் இயக்கி பொங்கல் தினத்தன்று வெளிவந்துள்ள படம்தான் ஈஸ்வரன். திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அனைவரும் மதிக்ககூடிய குடும்பமாக இருப்பதுதான் பெரியசாமி (பாரதிராஜா) குடும்பம். அவரது மகன்தான் ஈஸ்வரன் (சிம்பு). மனைவியை இழந்த பெரியசாமி, நல்ல தந்தையாக பிள்ளைகளை வளர்த்து வருகிறார். பிள்ளைகள் வளரவும் ஆளுக்கு ஒரு பக்கம் செல்கின்றனர். அப்பா பெரியசாமியை மகன் ஈஸ்வரன் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். தந்தை பெரியசாமியால் பாதிக்கப்பட்டு சிறை சென்றவர் பலிவாங்க துடிக்கிறார். அவரிடம் இருந்து தனது தந்தை மற்றும் குடும்பத்தை காப்பாற்றுவதே படத்தின் மீதிக்கதை.

நண்பர்களுடன் அரட்டை, எதிரியுடன் சண்டை, நாயகியுடன் பாட்டு என பல பரிமாணம் காட்டி இருக்கிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா மிக அருமையான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். பாரதிராஜா-வின் இளமை பருவ காட்சியில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா அசத்தி இருக்கிறார். வில்லனாக ஸ்டண்ட் சிவா மிரட்டி இருக்கிறார். கதாநாயகியாக நிதி அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு இசை தமன், தரமான பாடல்களை கொடுத்து இசைபிரியர்களை கவர்ந்து அசத்தியுள்ளார்.

Advertisement

நகைச்சுவை கதாபாத்திரத்தில் பால சரவணன் எதார்த்தமாக நடித்துள்ளார். நடிகர் முனீஸ்காந்த் நகைச்சுவையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரால்தான் கதையில் திருப்புமுனை ஏற்பட்டு படம் விறுவிறுப்பு ஆகிறது.

அடுத்து என்ன நடக்கும், படத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. இருந்தாலும் படம் பார்பதற்கு அருமை. இந்த படத்தினை குடும்பத்தோடு பார்த்து சந்தோசமாக பொழுதுபோக்கும் படமாக அமைந்துள்ளது.