“48,000 ஊழியர்கள் இனி வீட்டிலயே இருக்க வேண்டியதுதான்” – மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி

கொரோனா பரவலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் ஒரு சிலரை தவிர்த்து மீதமுள்ள ஊழியர்கள் இனி நிரந்தரமாக தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் 2 மாதமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர்.

கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவரவர் இடங்களுக்கு ஏற்றவாறு சம்பளம் மாறுபடும் எனவும் மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.

இதன்படி 48 ஆயிரத்துக்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.