900 கணக்குகளை முடக்கிய Facebook நிறுவனம்…

சமிபத்தில் அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்க போலிசார் ஒருவரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் பல போராட்டங்கள் உருவெடுத்தன.

இந்த இனவெறி சம்பந்தமான போராட்டங்களுக்கு ஆயுதங்கள் கொண்டு வருவது குறித்து Proud Boys and the American Guard போன்ற குரூப்பில் சிலர் விவாதித்துள்ளனர். இதனை கண்டறிந்த Facebook நிறுவனம் அதில் தொடர்பில் இருந்த சுமார் 900 கணக்குகளை முடக்கியுள்ளது.

Facebook removes another 900 accounts linked to hate groups

Proud Boys குரூப்பில் இருந்த 470 கணக்குகளையும், American Guard குரூப்பில் இருந்த 430 கணக்குகளையும் முடக்கப்பட்டுள்ளன என Facebook நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், கடந்த மாதம் சுமார் 200 கணக்குகளை இதே போல் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அமெரிக்கா போரட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையும், அதனை ஊக்குவிப்பவர்களையும் கண்கானித்து நடவடிக்கை எடுத்த வருவதாக Facebook நிறுவனம் தெரிவித்துள்ளது.