எச்சரிக்கை : போலி வங்கி ஆப்கள் மூலம் பணம் திருடும் மர்ம மனிதன்

வளர்ந்து வரும் தொழிநுட்பம்  மூலம் தற்போது வங்கியில் உள்ள மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ICICI, RBL, HDFC வங்கிகளின் போலி ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு SMS அனுப்பப்படுகிறது. அதாவது கார்டுகளில் உள்ள தொகையை அதிகப்படுத்தி தருவதாக டவுன்லோட் லிங்க் அனுப்பி அதில் வாடிக்கையாளர்களின் வங்கி விவரம் பூர்த்தி செய்த பிறகு எங்களது வங்கி ஊழியர்கள் உங்களை விரைவில் தொடர்புகொள்ளுவார்கள் என காட்டப்படுகிறது.

இறுதியில் அந்த கார்டில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதனையடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள போலி ஆப்கள் நீக்கப்பட்டுவிட்டதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

Advertisement