youtube – வீடியோ பார்த்து கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்..!

யுடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா வாரங்கல் அருகே ஹன்மகொண்டா பகுதியில் செயல்ப்பட்ட மருத்துவமனை ஒன்றில் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் சென்ற காவல்துறை, கருக்கலைப்பு செய்யும் அறைக்கு சென்றுள்ளனர்.

அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டிருந்த போலி மருத்துவர் இந்திரா ரெட்டி(வயது38) போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் கருக்கலைப்பு செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுத்திருந்தார்.

அப்பெண்ணை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அங்கு உதவி செவிலியராக இருந்த சட்டீஸ்கர் பெண்மனியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தது.

அதனையடுத்து தப்பிய ஓடிய போலி மருத்துவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் போலி மருத்துவர் கூறியது என்னெவென்றால்; நான் சில வருடங்களுக்கு முன் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தேன்.

அங்கு எனக்கு பொதுமான ஊதியம் கிடக்கவில்லை, அதன் பின் இந்த கிளினிக்கை ஆரம்பித்து, ஊரக பகுதிகளில் பெண் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களை கண்டறிந்து தன்னுடைய கிளினிக்கில் செவிலியர் உதவியுடன் கருக்கலைப்பு செய்து வந்தேன் என்று போலி மருத்துவர் கூறியுள்ளார்.

மேலும் போலிமருத்துவரிடம் இருந்து போலீசார் ஓர் திடுக்கிடும் உண்மையை வெளிவர வைத்தனர்.. அது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது அது என்னவென்றால், போலி மருத்துவர் கருக்கலைப்பு செய்யும் முறை பற்றி படிக்காமல், யுடியூப் வீடியோக்களை பார்த்து மற்றவர்களுக்கு கருக்கலைப்பு செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.


இதனையடுத்த அந்த கிளினிக்கை காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் அங்கு சென்று சீல் வைத்தனர். அந்த போலி மருத்தவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.