ராகுலை காந்தியை பற்றி தவறான செய்தி பரப்பிய பிரபல மீடியாக்கள்

துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு 14 வயது சிறுமி கேள்வி கேட்பது போல ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது உண்மை என நம்பிய ஆங்கில பத்திரிக்கைகளும் இதை ஒரு செய்தியாக வெளியிட்டது. ஆனால் இது ஒரு போலியான செய்தி என தற்போது வெளிவந்துள்ளது.

 

Advertisement

அந்த சிறுமி ராகுலை பார்த்து 80% காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் செய்யாததையா இனிமேல் செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி கேட்பது போல வீடியோ வெளிவந்தது. உண்மை என்னவென்றால் அந்த சிறுமிக்கும் ராகுல் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

அந்த சிறுமி 2016ம் ஆண்டு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதை screenshot எடுத்து எடிட் செய்து இப்படி ஒரு தவறான செய்தியை பரப்பியுள்ளார்கள்.

ராகுல் காந்திக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகள் பொய்யான செய்தியை பரப்புவதாக தெரிய வந்துள்ளது.