“விஜய்லாம் சின்னப்பையன் சார்”..அவமானப்படுத்திய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக இருப்பவர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

கடந்த 2002 ம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழன் படம் வெளியானது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்த மஜீத் இந்த படத்தை இயக்கினார். படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் கதை ரீதியாகவும், சமூக நோக்குடனும் அந்தப் படத்தில் விஜய் நடித்தது அவரது ரசிகர்களை ரசிக்கவே வைத்தது.
தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு ஐஸ்வர்யா “யார் ஹீரோ” என கேட்டுள்ளார். விஜய் என பதில் வந்ததும் “விஜய்யா…சார் அவன்லாம் சின்னப்பையன் சார். எனக்கு ஜோடி பொருத்தம் சரியாக இருக்காது. அஜித் மாதிரி வேற யாராக இருந்தாலும் ஓகே. எனக்கு ஜோடி பொருத்தம் சரியா இருக்கும் சார்” என கூறி அதை நிராகரித்துள்ளார்.

இதையடுத்து ஐஸ்வர்யா ராய்க்கு கால்ஷீட் பிரச்சனை என விஜய்யிடம் கூறி சமாளித்துள்ளார்கள். இதனால் ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அந்த சமயத்தில் உலக அழகியாக தேர்வான ப்ரியங்கா சோப்ராவை புக் செய்தார்களாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்திருக்கிறார்.