பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். அவருக்கு வயது 98. மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஐந்து நாள்கள் சிகிச்சை பெற்ற பிறகு அவா் வீடு திரும்பினாா். மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் ஜூன் 29 அன்று அனுமதிக்கப்பட்டாா்.

tamil latest news

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திலீப் குமார் இன்று காலமானார். அவருக்கு 98 வயதானதால், வயது மூப்பின் காரணமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டது.