பூட்டிக்கிடந்த வீடு..! திறந்துப் பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர்கள் அம்ரிஷ் படேல் மற்றும் அவுரங் படேல். சகோதரர்களான இவர்கள் இரண்டு பேருக்கும், திருமணமாகி தலா இரண்டு குழந்தைகள் உள்ளது.

சகோதரர்கள் இரண்டு பேருக்கும் சொந்தமான வீடு ஒன்று வாத்வா என்ற பகுதியில் உள்ளது. இந்நிலையில், குழந்தைகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு, சகோதரர்கள் இரண்டு பேரும் சென்றுள்ளனர்.

ஒரு நாள் ஆகியும் கணவர்கள் திரும்ப வராததால், இரண்டு பேரின் மனைவிகளும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்கள் இரண்டு பேருக்கும் சொந்தமான அந்த வீட்டில் பார்த்துள்ளனர்.

Advertisement

ஆனால், அந்த வீடு உள்பக்கமாக பூட்டுப்போட்டு கிடந்துள்ளது. இதையடுத்து, கதவையுடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 6 பேரும் வௌ;வேறு அறைகளில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள், 6 பேரும் எதற்காக தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என்பது இன்னும் மர்மமாகவே இருந்து வருகிறது.